Tuesday, January 1, 2013

வேண்டலேற்றம் _/\_

வெல்லத் தாள் வேணுமே! மெல்லத் தாள் தருவீரோ! உள்ளத் தால் மருவி, பள்ளத் திலேயே வளரும் கள்ளத் தீவினை கபடனெனை எள்ளத் தினைப் பார்த்தால், தெள்ளத் தெளிந்து, மகிழ்ந்திடுவேனே!

Wednesday, June 29, 2011

மாளா மனம் !

தேடியே இருந்தேன்,
தினம் இளைத்தேன்
கூடியும் பேசினோர்
குறைகளை விட்டகன்றேன்
ஆயினும் மனமோ,!

குன்றொனா குன்றின்
குடங்கை அதிலேறி
குரெங்கென ஆடுது
மாசற வாழவே
மகத்துவம் என்செய்தாய்!

மதிகெட்டு ஓடும்
மனத்திடை புகுந்து
மறித்து விட்டாலும்
மதியினை மதியாமனம்
மடியவில்லை இன்னும்...
-

வினைகள் வீழட்டும்
விடிவு பிறக்கட்டும்
என வாழ்த்துவீரே!

Monday, February 14, 2011

தாயவள் வேண்டுமே!

அப்போ;
தள்ளாடி நடக்கயிலே
தாடையை பிடித்துருவி
இந்தாடி செல்லமென்று
முத்தமழை பொழிந்து
பொழுதாய் சோறூட்டி
பொறுப்பாய் நீராட்டி
வாடாமல் வைத்தவளே!

இப்போ;
தூரமாய் நீயிருந்து
தூலத்தை பாரடாயென்றும்,
விட்டிடாதே பின்னதனால்
கொட்டிடாதே என்றுரைக்கும்
போதெல்லாம் ஏனோயெதற்கோ
ஏக்கமுறுமென் நெஞ்சம்
தேடுதடி உன்மடியை!

Monday, August 2, 2010

உழைப்பும் களைப்பும்;


நாளெல்லாம் உழைத்து நரம்பெல்லாம் இழுக்க,
நல்லுணர்வும் இல்லா நாய்போலே திரிந்து,
உழைத்த பயிரின் உபரிப்போக, விற்றுவந்தால் -
மிஞ்சியிருப்பது என் நெஞ்சின் கனமே !

நாளும் தெரிந்த நல்லோர் நன்றாய் தான் -
சொன்னர்; விவசாயி நாட்டின் முதுகெலும்பென்று
ஒருகனம்; பாரீரெனை தெரிகிறதா? எனது -
முதுகெலும்பு; எத்துனையென்று எண்ணிக்கொள்ளுங்கள்...

Sunday, June 13, 2010

வேடதாரி!

நாளொன்றுக்கு வேறொன்றாய்
முகம் மாற்றும் நானொரு -
நல்ல வேடதாரி! -என்னைப்
போல் நீங்களும் தான்?
வேறென்ன சொல்ல...

Wednesday, June 2, 2010

விரும்பா நேர வெறுப்பில் உமிழ்ந்தவை:

செய்த பிழைக்காக சிரம் தாழ்த்தியும்,
தலைக் கொய்தானே சிறுநெஞ்சை - அவனிடம்
தவறுக்காய் தலைவணங்கியும் விதைத்தானே நஞ்சை
விலையாநிலம் போலானது கடுஞ்சொல்லால் புஞ்சை !

தாயைப் பழித்தானே தரவுக் கூரா ?
அவனுக்கும்பா லூட்டியதொரு தாய் மாரா ?
வார்த்தைகளால் வஞ்சிக்கும் இவன்போன்றோர் தேரா ?
அவனடியையும் தாங்கி நிலமிருக்குது பாரா ?

Friday, March 26, 2010

தமிழன் வாழ்வியல்

ன்றுகூடி கொட்டுங்கடி
கை தட்டுங்கடி !
மிழன்; வாழையடி -
வாழையாய் வாழவேண்டுமடி !

ல்லவனாய் நடிப்பவனுக்கு
ம்பளம் - நாலுகோடி ?
ல்லவனாய் வாழ்பவனின்
வாழ்க்கை நாறுதடி !!