Monday, February 14, 2011

தாயவள் வேண்டுமே!

அப்போ;
தள்ளாடி நடக்கயிலே
தாடையை பிடித்துருவி
இந்தாடி செல்லமென்று
முத்தமழை பொழிந்து
பொழுதாய் சோறூட்டி
பொறுப்பாய் நீராட்டி
வாடாமல் வைத்தவளே!

இப்போ;
தூரமாய் நீயிருந்து
தூலத்தை பாரடாயென்றும்,
விட்டிடாதே பின்னதனால்
கொட்டிடாதே என்றுரைக்கும்
போதெல்லாம் ஏனோயெதற்கோ
ஏக்கமுறுமென் நெஞ்சம்
தேடுதடி உன்மடியை!