Thursday, November 26, 2009

[இன்னொரு இதயம் வேண்டும்]

இருவரின் காமப்பசிக்கு
பிறந்த பிள்ளை !

தன்வயிற்றுப் பசிக்கு
பிச்சை எடுக்கிறது ?

எதிர்காலத்தின் கனவு
கண்களில் இல்லை !

அதன் நிகழ்காலமோ
மற்றவர்க்கு தொல்லை?

நெஞ்சமது குமுறுகிறது !!
நெருடலான நிமிடங்களை -

கடக்க இன்னொரு
இதயம்தான் வேண்டும் !

Monday, November 16, 2009

[காதல்]

ஒன்றான உருவே
உருவற்ற திருவே
நன்றான ஒன்றே !
நமனோட்டும் அரசே !!

கன்றான என்றன்
கர்மங்கள் தொலைக்க
கனிவது செய்வீர் !
காதலை ஏற்பீர் !!

Monday, November 9, 2009

[கவிதை]

மழைக்குள் குடை இருந்தும் ;
குடைக்குள் மழை வருவதில்லை !

இறைக்குள் நாம் இருந்தும் ;
இறைப் பற்றிய தெளி(ரி)வு இல்லை !

மனிதனின் மகத்துவம் அறிந்தும் ;
நல்வாழ்வு வாழ்வார் இல்லை !

கர்மங்களை தொலைத்து நாம் ;
கடைத்தேறுவது எக்காலமோ ?

Friday, November 6, 2009

இயற்கை என்னும் இளையவன்

எவ்வளவு நீரைய்யா எங்கே வைத்திருந்தார் !
இவ்வளவு நீரையும் எப்படி பாதுகாத்தார் !

கொஞ்சம் நினையுங்கள் கர்மங்களை தொலையுங்கள்
தஞ்சமுடைய இயற்கையை விஞ்சும் மனிதரில்லை !

இருப்பிடம் தரனியாய் வைத்தது யார்
கேட்டுப்பெற்றோமா இல்லை கெட்டுப் பெற்றோமா ?

விட்டொழித்து அழைத்து செல்ல வருவாரா !
கோள்களும் கணக்காய் சுற்றுவது எப்படி !

எண்ணற்ற கேள்விகள் அடிமனத்தின் ஆழத்தில்
எப்போது பதில்வந்து எனக்கு கிடைக்கும் !!!!!!

படைத்தவன் அருளென்று சும்மாயிருக்கவும் முடியவில்லை,
எம்மால் ஆவதாக எதுவும் விளங்கவில்லை.