Thursday, December 31, 2009

[ நீ பெற வேண்டியது நின் கையில் : (எனக்கு இட்டது) ]

காலம்
கடக்கிறது கேட்காமல்,
கரைகிறேன் தெரியாமல் !

மனம்
பழக்கங்கள் பண்பாவதால்,
பண்பெற வேண்டும் !

ஆசை
இருமுனை ஆயுதம்,
ஏற்றமோ பார்க்கணும் !

மனிதன்
மாசற வாழ
மகத்துவம் செய் !

தாய்
தரணியில் ஓர்
தன்னலமற்ற சேவகி !

எண்ணம்
ஏற்றம் வேண்டும்,
எதிலென்று அறி !

கடவுள்
காட்சிப் பொருளல்ல
கண்டுபிடி நீயே !

யோகம்
புத்தனாய் இல்லாவிடினும்,
புத்தியால் பயன்பெறு !

காதல்
காமக் காதலுண்டு,
காதல் காமமில்லை !

தமிழ்
தாயின் நேசத்தை,
தானறிய வேண்டும் !

தோழமை
நெடிய வழியில்,
வருமொரு துணை !

முன்னோர்
மூத்தோர் முதுமொழி,
நன்மொழி ஒன்றே !

சித்தன்
எளிமை கொண்டதனால்
ஏற்றம் கண்டோர் !

அறிவு
மெய்யென்ற ஒன்றை,
நாடத்தான் சமயங்கள் !

Sunday, December 13, 2009

[:மனிதன் என்ற மகத்துவன்:]

தன் சிந்தையாலே
எதையும் வென்று-விட்டான் !
இயந்திரம் எல்லாம்
தந்திரமாய் கண்டு-விட்டான் !


பம்பரமாய் சுற்றி -சுற்றி
வாழ பழகிக்-கொண்டான் !
பாரினிலே புதுப்-பொலிவு
யாவும் பெற்று - கொண்டான் !

தேன் தமிழை இவன்
பேச நாக் கூசுகின்றான் !
பட்டறிவை பகுத்தறிவு என்று
இவன் நினைத்து கொண்டான் ! !

இத்தனைக்கும் காரணம்
என்ன என்றால்?
பர அறிவை சாராமல்
தனியாகவே இருந்து விட்டான் ! !