Friday, November 6, 2009

இயற்கை என்னும் இளையவன்

எவ்வளவு நீரைய்யா எங்கே வைத்திருந்தார் !
இவ்வளவு நீரையும் எப்படி பாதுகாத்தார் !

கொஞ்சம் நினையுங்கள் கர்மங்களை தொலையுங்கள்
தஞ்சமுடைய இயற்கையை விஞ்சும் மனிதரில்லை !

இருப்பிடம் தரனியாய் வைத்தது யார்
கேட்டுப்பெற்றோமா இல்லை கெட்டுப் பெற்றோமா ?

விட்டொழித்து அழைத்து செல்ல வருவாரா !
கோள்களும் கணக்காய் சுற்றுவது எப்படி !

எண்ணற்ற கேள்விகள் அடிமனத்தின் ஆழத்தில்
எப்போது பதில்வந்து எனக்கு கிடைக்கும் !!!!!!

படைத்தவன் அருளென்று சும்மாயிருக்கவும் முடியவில்லை,
எம்மால் ஆவதாக எதுவும் விளங்கவில்லை.

4 comments:

vasu balaji said...

கவிதை நன்று. கேசவன், செட்டிங்கில் அடல்ட் கண்டெண்ட் ஆப்ஷன் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். எடுத்து விடவும். வர்ட் வெரிஃபிகேஷனும் அவசியமில்லை. பின்னூட்டங்களும் வராது.

தேவன் said...

/// தியாவின் பேனா said... ///

நன்றி !!

தேவன் said...

/// வானம்பாடிகள் said...

கவிதை நன்று. கேசவன், செட்டிங்கில் அடல்ட் கண்டெண்ட் ஆப்ஷன் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். எடுத்து விடவும். வர்ட் வெரிஃபிகேஷனும் அவசியமில்லை. பின்னூட்டங்களும் வராது. ///


செய்து விட்டேன் பாருங்கள், இன்னும் ஏதேனும் குறை இருந்தால் கூறுங்கள் ஐயா !

DAILY ARTS said...

good; keep it up