Sunday, December 13, 2009

[:மனிதன் என்ற மகத்துவன்:]

தன் சிந்தையாலே
எதையும் வென்று-விட்டான் !
இயந்திரம் எல்லாம்
தந்திரமாய் கண்டு-விட்டான் !


பம்பரமாய் சுற்றி -சுற்றி
வாழ பழகிக்-கொண்டான் !
பாரினிலே புதுப்-பொலிவு
யாவும் பெற்று - கொண்டான் !

தேன் தமிழை இவன்
பேச நாக் கூசுகின்றான் !
பட்டறிவை பகுத்தறிவு என்று
இவன் நினைத்து கொண்டான் ! !

இத்தனைக்கும் காரணம்
என்ன என்றால்?
பர அறிவை சாராமல்
தனியாகவே இருந்து விட்டான் ! !

5 comments:

vasu balaji said...

/பட்டறிவை பகுத்தறிவு என்று
இவன் நினைத்து கொண்டான் ! !
/

நல்ல சிந்தனை.

/இத்தனைக்கும் காரணம்
என்ன என்றால்?
பர அறிவை சாராமல்
தனியாகவே இருந்து விட்டான் ! !/

ம்ம். நன்று

Chitra said...

ட்டறிவை பகுத்தறிவு என்று
இவன் நினைத்து கொண்டான் ! !
............உண்மையை அழகா கவிதையில் சொல்லி இருக்கீங்க.

தேவன் said...

நன்றி வானம்பாடிகள் சார் !

நன்றி சித்ரா மேடம் !

அன்புடன் மலிக்கா said...

நல்ல சிந்தனை, வரிகள் அருமை..

தேவன் said...

வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி மலிக்கா !