Monday, February 14, 2011

தாயவள் வேண்டுமே!

அப்போ;
தள்ளாடி நடக்கயிலே
தாடையை பிடித்துருவி
இந்தாடி செல்லமென்று
முத்தமழை பொழிந்து
பொழுதாய் சோறூட்டி
பொறுப்பாய் நீராட்டி
வாடாமல் வைத்தவளே!

இப்போ;
தூரமாய் நீயிருந்து
தூலத்தை பாரடாயென்றும்,
விட்டிடாதே பின்னதனால்
கொட்டிடாதே என்றுரைக்கும்
போதெல்லாம் ஏனோயெதற்கோ
ஏக்கமுறுமென் நெஞ்சம்
தேடுதடி உன்மடியை!

7 comments:

Chitra said...

உணர்வுகளை வெளிப்படுத்தும் அருமையான கவிதை.

snkm said...

தாய்க்கு நிகர் எதுவுமே இல்லை!

தேவன் said...

பாராட்டுதலிலும் தாய்மையே முதல்!

பாராட்டுக்கு நன்றிங்க...

தேவன் said...

நன்றி snkm ஐயா,

TamilTechToday said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

மாலதி said...

அருமையான கவிதை.

தேவன் said...

@ மாலதி
உங்கள் வருகைக்கு நன்றிங்க