Thursday, December 31, 2009

[ நீ பெற வேண்டியது நின் கையில் : (எனக்கு இட்டது) ]

காலம்
கடக்கிறது கேட்காமல்,
கரைகிறேன் தெரியாமல் !

மனம்
பழக்கங்கள் பண்பாவதால்,
பண்பெற வேண்டும் !

ஆசை
இருமுனை ஆயுதம்,
ஏற்றமோ பார்க்கணும் !

மனிதன்
மாசற வாழ
மகத்துவம் செய் !

தாய்
தரணியில் ஓர்
தன்னலமற்ற சேவகி !

எண்ணம்
ஏற்றம் வேண்டும்,
எதிலென்று அறி !

கடவுள்
காட்சிப் பொருளல்ல
கண்டுபிடி நீயே !

யோகம்
புத்தனாய் இல்லாவிடினும்,
புத்தியால் பயன்பெறு !

காதல்
காமக் காதலுண்டு,
காதல் காமமில்லை !

தமிழ்
தாயின் நேசத்தை,
தானறிய வேண்டும் !

தோழமை
நெடிய வழியில்,
வருமொரு துணை !

முன்னோர்
மூத்தோர் முதுமொழி,
நன்மொழி ஒன்றே !

சித்தன்
எளிமை கொண்டதனால்
ஏற்றம் கண்டோர் !

அறிவு
மெய்யென்ற ஒன்றை,
நாடத்தான் சமயங்கள் !

3 comments:

Chitra said...

கடவுள்
காட்சிப் பொருளல்ல
கண்டுபிடி நீயே ! ...........எல்லாமே அருமை. "கடவுள்" பற்றிய கருத்து, எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

தேவன் said...

/// கடவுள்

காட்சிப் பொருளல்ல
கண்டுபிடி நீயே ! ...........எல்லாமே அருமை. "கடவுள்" பற்றிய கருத்து, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ///


வாங்க. வருகைக்கு நன்றி !

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்